திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் பால்குட திருவிழா

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் பால்குட திருவிழா

 திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால்குட எடுத்து சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.  

திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால்குட எடுத்து சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று தை அம்மாவாசையை முன்னிட்டு 17ஆம் ஆண்டாக அபிராமி அம்மன் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மஞ்சள் உடை உடுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோயில் வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

Tags

Next Story