புளியங்குடியில் பால்குட ஊர்வலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பால்குட ஊர்வலம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 7 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர் கோவிலில் இருந்து குருநாதர் சக்தியம்மா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் நேமிதங்களை செலுத்துவதற்காக பால்குடம், தீர்த்த குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.