அன்னாசாகரத்தில் விமரிசையாக நடைபெற்ற பால்குடம் ஊர்வலம்
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் பகுதியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெரும். அதனடிப்படை யில் இந்தாண்டும் அன்னசாகரம் பகுயிதில் கடந்த 18 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் முருக பெருமானுக்கு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
நேற்று 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து முருகருக்கு பால் அபிசேகம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து காவடி எடுத்தும், அழகு குத்தியும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும் நேற்று இரவு சிவசுப்ரமணியருக்கும் வள்ளி தெய்வாணையுடன் திருகல்யான வைபவமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் 24 தேதி பிரசித்தி பெற்ற பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் மகாதேரோட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மிட்டா நூலஅள்ளி, கோம்பை, பாரதிபுரம், குமாரசாமி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.