மல்லிகுட்டை திம்மராயன் திருக்கோவிலில் விநாயகருக்கு பால்குட ஊர்வலம்
தர்மபுரி மாவட்டம், மல்லிகுட்டை திம்மராயன் திருக்கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு பால்குட ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டல்பட்டிஅருகே மல்லி குட்டை திம்மராயன் திருக்கோவிலில் அமைந்துள்ள விநாயகர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் முடிந்து 48 வது மண்டல பூஜை முன்னிட்டு இன்று காலை பால்குடம் ஊர்வலம் மேளதளங்கள் முழங்க ஊர்வலமாக விநாயக கோவில் வந்தடைந்து விநாயகருக்கு பல அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து திம்மராயன் பெருமாள் திருக்கோவிலில் பெருமாளுக்கு பொங்கல் வைத்து படைவீட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வெள்ளி கவசத்தில் அலங்கரித்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story