பள்ளப்பட்டி: பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ முகாம்

பள்ளப்பட்டி: பொது அறுவை சிகிச்சைக்கான  மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

பள்ளப்பட்டியில் பொது அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டியில் உள்ள சுல்தார் ஹபிபுல்லா மஹாலில், கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணி மற்றும் வெள்ளியங்கிரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

மருத்துவ முகாமில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் அசோக்குமார் மற்றும் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு நிபுணர் கௌசல்யா ஆகியோர் பங்கேற்ற இந்த மருத்துவ முகாமில், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, பாதம் நரம்பு திறன் பரிசோதித்தல், சர்க்கரை புண் ஏற்பட்டிருந்தால், அதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், இந்த முகாமில் பங்கேற்ற பொதுமக்களில் முதலில் வரும் 10 நபர்களுக்கு அவர்களுடைய உடல் பாதிப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அதனை இலவசமாக செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சர்க்கரை நோய் கால் புண் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, உணவு பாதை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, தீக்காயத்திற்கான தோல் சீரமைப்பு அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றுதல், தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை,மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை போன்றவற்றை இலவசமாக 10 நபர்களை தேர்ந்தெடுத்து, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story