பள்ளிபாளையத்தில் "லியோ" ரிலீஸ்..! களையிழந்த தியேட்டர்கள்..!!

பள்ளிப்பாளையத்தில் மூன்று தியேட்டர்கள் உள்ளதால், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் அவர்களின், லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. படத்தின் டிரைலர் வெளியிட்ட நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து நிலையில், அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் வெளியிடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென படக்குழு தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் ,நீதிமன்றம் அதனை மறுத்து காலை ஒன்பது மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது .அதன் அடிப்படையில் இன்று படம் வெளியானது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மொத்தம் மூன்று திரையரங்கங்கள் உள்ளன.இந்நிலையில் இந்த மூன்று திரையரங்கத்திலும் லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் அரசு பொது விடுமுறை நாள் இன்று ஏதும் இல்லை என்பதாலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை இல்லை என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் மட்டுமே திரையரங்கில் இருந்தது. மேலும் ஒரே ஊரில் மூன்று திரையரங்கில் ஒரே திரைப்படம் திரையிடப்பட்டதால் போதுமான ரசிகர்கள் ஏதும் இன்றி மிகக் குறைந்த அளவிலே முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதன் காரணமாக வழக்கமாக விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது உள்ள உற்சாகம் பரபரப்பு இந்த முறை சற்று குறைவாக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சற்று நீளமாக இருப்பதாகவும் படம் நன்றாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்....

Tags

Next Story