பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
ஆக்கிரமிப்பு அகற்றம்
காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக நீர் உறிஞ்சினால், நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தற்பொழுது பள்ளிபாளையம் காவிரி ஆறு சமய சங்கிலி ஆற்றில் நீர் குறைவு ஏற்பட்டுள்ளதால்.
மக்கள் அனைவரும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. குடிநீர் குழாய்களில் மோட்டர் வைத்தோ அல்லது ஹோஸ் போட்டோ குடிநீர் உறிஞ்சப்பட்டால் கண்டிப்பாக மோட்டார் மற்றும் ஹோஸ் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது ..மேலும் காவிரி ஆற்றில் தற்போது முழுமையாக நீர்வரத்துகுறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story