பள்ளிபாளையம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

பள்ளிபாளையம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

பள்ளிபாளையம் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது.

இதில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஆதவன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சக்திவேல்,

மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story