பாமாயில், பருப்பு ஜூன் மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

பாமாயில், பருப்பு  ஜூன் மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கூறினார்.


பெரம்பலூர் மாவட்டத்தில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மே-2024 மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் கூறினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, முதன்மைச்செயலாளர் ஆணையாளர் அவர்கள் மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பாமாயில் மற்றும் துவரம்பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளி முடிவுகள் மேற்கொள்ள தாமதம் ஆனதால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு பொருட்களை குறித்த நேரத்தில் வழங்க இயலவில்லை என்றும், மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜீன் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு நகர்வு தாமதமானதை தொடர்ந்து மே- மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம்பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் கடைகளில் இருப்பு பெறப்பட்டவுடன் ஜீன் மாதம் பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story