பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ரேசன் கடையில் பெறலாம்
பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கடந்த மாதம் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கடந்த மாதம் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அவர்களால் 28.05.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததன் காரணமாக, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஒப்பந்த பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று, ஒப்பந்த நடவடிக்கை இறுதி செய்யப்பட்டதால், கடந்த மாதம் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க இயலாத காரணத்தால், மேற்காணும் இரு பொருட்களும் மே மாதம் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் தவிர இதர குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜுன் மாதத்தின் முதல் வாரத்தில் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு இரண்டு என்ற எண்ணிக்கையில் வழங்கப்படும் என அரசால் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு கடந்த மாதம் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜுன் மாதம் முதல் வாரத்தில் நியாய விலை கடைகளில் பாமாயில் (2 எண்ணம்) மற்றும் துவரம்பருப்பு (2 கி.கி) பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story