வைப்பூர் ரேஷன் கடையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பாமாயில்

வைப்பூர் ரேஷன் கடையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பாமாயில்

பாக்கெட்டில் வழங்கப்படும் பாமாயில், 1 லி., தண்ணீர் பாட்டில்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாக்கெட்டில் வழங்கப்படும் பாமாயில், 1 லி., தண்ணீர் பாட்டில்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ், மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதத்திற்கான பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. அப்போது, அரிசி, பருப்பு, சர்க்கரை பொருட்களுடன், 1 லி., பாமாயில் வழங்கப்பட்டன. வழக்கமாக, பாக்கெட்டில் வழங்கப்படும் பாமாயில், நேற்று, 1 லி., தண்ணீர் பாட்டில்களில் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. சுகாதாரமற்ற முறையில், தண்ணீர் பாட்டில்களில் பாமாயில் ஊற்றி வழங்கப்பட்டது, அப்பகுதிவாசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், கலப்படம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து, ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, வினியோகத்திற்காக ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த பாமாயில் பாக்கெட்டுகளில், எறும்புகள் புகுந்து கடித்ததால், இரண்டு பெட்டியில் இருந்த 20 பாமாயில் பாக்கெட்டுகளில் ஓட்டை ஏற்பட்டு, பாமாயில் லீக் ஆனது. அதனால், 1 லி., பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story