காங்கேயம் சிஎஸ்ஐ இயேசு ரட்சகர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14,ம்-தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. சிஎஸ்ஐ ஆயர் தலைவர் ஏர்னட்ஸ் மற்றும் ஆயர் டேனியல் தலைமையில் நடைபெற்ற சிறப்புஆராதனை .
குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு பவனியாக சிஎஸ்ஐ சர்ச்சையில் துவங்கிய ஊர்வலம் தாராபுரம் ரோடு,களிமேடு, காவல் நிலைய ரவுண்டானா , பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக மீண்டும் சிஎஸ்ஐ சர்ச்சில் முடிவடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.