எடப்பாடியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்.

எடப்பாடியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்.

குருத்தோலை பவனி 

குருத்தோலை ஞாயிறு திருநாளை முன்னிட்டு எடப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தியபடி முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள புனித செல்வநாயகி ஆலயத்தின் ஞாயிறு குருத்தோலை பவனி ஊர்வலம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கிய குருத்தோலை பவணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தியபடி கிறிஸ்துவ பாடல்களை பாடிய படியும் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது வெள்ளாண்டிவலசு அருகே கிறிஸ்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதைத்தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும் உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story