ஓசோனா பாடலுடன் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

ஓசோனா பாடலுடன் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

 குருத்தோலை ஊர்வலம்

நத்தம் புனித ராயப்பர் ஆலயம் மற்றும் இம்மானுவேல் ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு விழாவில் கிறிஸ்தவர்கள் ஓசோனா பாடலுடன் குருத்தோலை ஊர்வலம் மேற்கொண்டனர்.

சிலுவைப்பாடுகளுக்கு முன்னதாக இயேசு கிறிஸ்து ஜெருசேலம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி நத்தத்தில் உள்ள புனித ராயப்பர் ஆலயம் மற்றும் இம்மானுவேல் ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் குருத்தோலை தினத்தைக் கொண்டாடினர். இதை தொடர்ந்து குருத்தோலைகளை கையிலேந்தி, ஓசோனா பாடல்களை பாடிய வண்ணம் புனித ராயப்பர் ஆலயத்திலிருந்து பங்குதந்தை பிரிட்டோ தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இது நகரின் முக்கிய வீதிகளான அவுட்டர் பகுதி, மாரியம்மன் கோயில் வீதி, பெரிய கடை வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

Tags

Next Story