பல்பாக்கி ஓங்காளியம்மன் தேர் திருவிழா

ஓமலூர் அருகே பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ஊராட்சிக்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருடா வருடம் வரும் தை மாதத்தில் தேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 18ஆம் தேதி புஷ்பம் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இதையடுத்து 29ஆம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று முன்தினம் ஸ்ரீ ஓங்காளியம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து, கரகம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓமலூர், பல்பாக்கி செட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story