சிறுநகர் கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

சிறுநகர் கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

திமுக

செங்கல்பட்டு மாவட்டம் சிறுநகர் கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,சிறுநகர் கிராமத்தில் 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ' திராவிட மாடல் அரசில் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்ராஜ் தலைமையில் சிறுநகர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்டாலின் குரல் திராவிட மாடல அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story