பனங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகம்

பனங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகம்

முத்துமாரி அம்மன்

நாகை மாவட்டம் பனங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன், மகாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர்,இளநீர்,சந்தனம், நெய்,தேன்,திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகமும்,சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பின்னர் முத்து மாரியம்மன்,மகா காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து இரவு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story