அறிக்கையை கிழித்த ஊராட்சி குழு துணை தலைவர் (பாஜக) ராஜபாண்டி

தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை ஊராட்சி குழு துணை தலைவர் (பாஜக) ராஜபாண்டி கிழித்தெரிந்தார்.
கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி மாதிரி திராவிடர் நல பள்ளி போன்றவற்றை நீக்கி அரசு பள்ளி என அரசு அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் பள்ளி பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவக்க அனுமதி அரிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் ஜாதி பெயர் இருந்தால் அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும் ஜாதியை அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வண்ணம் தீட்ட கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வறிக்கையை அமல்படுத்தக் கூடாது என கூறி சந்துரு ஆய்வறிக்கையை தேனி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் ஊராட்சி குழு துணை தலைவர் (பாஜக) ராஜபாண்டி.

Tags

Next Story