ரூபாய் 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள்

X
வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.
வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்யாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இந்நிலையில் அனைத்து பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்த மாவட்டங்களின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் அரிசி, தண்ணீர் பாட்டில், போர்வை, பாய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கெட் பாக்கெட், பால்பவுடர், பிரட் பாக்கெட், உள்ளிட்ட 14 பொருட்கள் அடங்கிய ரூ.2 லட்சத்து 75ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
Next Story
