பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த ஊராட்சி மன்ற தலைவர்

பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த ஊராட்சி மன்ற தலைவர்

சங்ககிரி அருகே 8 .50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.

சங்ககிரி அருகே 8 .50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கோனேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மேட்டாங்காடு பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 8இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து கோனேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மேல்நிலை நீர் தாக்கத் தொட்டியினை திறந்து வைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊராட்சி துணை தலைவர் பாப்பாத்தி, சங்ககிரி ஒன்றிய குழு உறுப்பினர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் உடனிந்தனர்.

Tags

Next Story