கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்

ஊரக பங்கேற்பு மதிப்பீடு

கோலத்தில் ஊராட்சி தகவல் வேளாண் மாணவியர் அசத்தல்
திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புண்டரீகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஜெயா வேளாண் கல்லூரி. இந்த கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர், திருவாலங்காடு ஊராட்சியில் வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், நேற்று திருவாலங்காடு வடக்கு மாட வீதியில், 'ஊரக பங்கேற்பு மதிப்பீடு' எனும் தலைப்பில் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களை கோலத்தில் வரைந்தனர். மேலும், விவசாயிகளின் பிரச்னைகளையும், கரும்பு மற்றும் நெல் விவசாயிகளின் வரவு -- செலவு கணக்கு, கிராமத்தில் உள்ள சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளின் எண்ணிக்கை, காலநிலை, பருவநிலை மாற்றம், ரிசோர்ஸ் மேப் பிரதிபலிக்கும் படி அமைத்திருந்தனர். இதை தொடர்ந்து கோவில், சர்க்கரை ஆலை, தேரடி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை பிரதிபலிக்கும் படி அமைக்கப்பட்ட கோலம் அனைவரையும் கவர்ந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டுகளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story