ஊராட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

ஊராட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

பைல் படம்

இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கேட்டு கன்னியாகுமரி ஊராட்சி தலைவர்கள் நல கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 52 ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதாக கடந்த சில மாதம் முன்பு அரசு அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் நல கூட்டமைப்பு சார்பில், இந்த நடவடிக்கை ரத்து செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்ட நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கண்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் வரும் 18- ம் தேதி முதல் 52 ஊராட்சிகளின் சார்பில் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக அடையாள உண்ணாவிரத போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடத்த கூட்டமைப்பு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், எனவே ஊராட்சி மக்கள் நலன் கருதி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு உரிய அனுமதியும் பாதுகாப்பும் தர வேண்டும் எனவும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story