தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்

தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்

போராட்டம்

தாமிரபரணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதை கண்டித்து மாங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் ஊராட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்.
குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஆறு திசை மாறி சென்றதால் பரக்காணி பகுதி தடுப்பனையின் பக்க சுவர் பகுதி கரையில் உடைப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஆற்றில் புகுந்தது. தற்போது கோடை காலம் என்பதால் ஆற்று நணீர் வரத்து குறைந்து, குடிநீர் கிணறுகளில் உப்பு புகுந்து, பொதுமக்களுக்கு உப்பு நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக தடுப்பணை பகுதியில் உடைப்படுத்த பகுதியை சீரமைத்து உப்பு நீர் புகாதவாறு தடுக்க வேண்டும் எனஏற்கனவே கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நடவடிக்கை எடுக்காது கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் மாங்காடு ஆற்றுப் பாலம் அருகே திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் போராட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

Tags

Next Story