பஞ்சாயத்து தலைவர்கள் பட்டறிவு பயணம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 40 ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டறிவு பயணமாக புதுக்கோட்டை மாவட்டம்,குழிப்பிறை ஊராட்சிக்கு வருகை புரிந்து அங்குள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர்.
அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த 40 ஊராட்சி தலைவர்கள் பட்டறிவு பயணமாக குழிபிறை வந்தனர். ஆணையர் அரசமணி, பிடிஓ நளினி, ஊராட் சித்தலைவர் அழகப்பன் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். பிறகு ஊராட்சியில் நடந்து வரும் திடக்கழிவு மேலாண்மை, கூட்டுக் குடிநீர் திட்டம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை அவர்கள் பார் வையிட்டனர். ஏற்பாடுகளை துணை பிடிஓ அறிவழகன் செய்திருந்தார். ஊராட்சி உதவியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
Next Story