வாலிபர்களை அரிவாளால் வெட்டிய ஊராட்சி உறுப்பினர் கைது

வாலிபர்களை அரிவாளால் வெட்டிய ஊராட்சி உறுப்பினர் கைது

கைது 

கீரிப்பாறை அருகே பேருந்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை அரிவாளால் வெட்டிய ஊராட்சி மன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த வாலிபர்களான அனிஷ் (20), விபின் (20)ஆகிய இரண்டுபேரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் தடிக்காரன் கோணம் நோக்கி செல்லும் போது அவர்கள் பைக் வழியில் பஞ்சர் ஆனது. பஞ்சர் ஓட்டுவதற்க்காக இவர்கள் தடிக்காரன் கோணம் ஜங்சனில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டு விட்டு இருவரும் வெள்ளாம்பிக்கு பஸ்சில் சென்றனர்.

அப்போது பஸ்சில் இருந்த அதேபகுதியை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்துவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனிஷ், விபின் ஆகிய இரண்டுபேரும் வெள்ளாம்பி வந்து இறங்கும்போது, அங்கிருந்த ஸ்ரீரங்கன் காணி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை மாரிமுத்துவிடம் கொடுத்ததாகவும், அவர் இவர்களை தாக்கியதாகவும் தெரிகிறது. காயமடைந்த இரண்டுபேரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு துணையாக இருந்த ஸ்ரீரங்கன் காணி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story