நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

புதுக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. இதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. புதிய நகராட்சி பகுதியை ஒட்டி உள்ள தேக்காட்டூர் 9ஏ நத்தம் பண்ணை உள்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மாநகராட்சி தரம் உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த 9ஏ நத்தம் பண்ணை, தேக்காட்டூர், மேலதே முத்தும்பட்டி, கீழ தேமுத்தும்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டஅவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story