வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஊராட்சி செயலர் கட்டிய வீடு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் குணாநீதி, இவர் கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற செயலாளராக கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் குணாநீதி தனது வீட்டின் அருகே கட்டிவரும் புதிய வீட்டிற்கு பைப்லைன் மூலம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக குணாநீதி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் குணாநீதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் புதிய வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற சென்ற ஊராட்சி செயலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.