ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவ லர் கேசவலு முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். பிரிவு உதவி அலுவலர் அன்பு தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலை மின் விளக்கு வசதி உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், கவுன்சிலர்களின் தங்கள் பகுதியில் மக்கள் குறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story