சிவகாசியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

சிவகாசியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

கவுன்சிலர்கள் கூட்டம்

சிவகாசி ஊராட்சி பகுதிகளில், கோடை கால குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும்போது, தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தாலும், பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது பல இடங்களில் குறைபாடுகளுடன் உள்ளது. வரும் 3 மாதங்களுக்கு, ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். மேலும், ஊராட்சி பகுதிகளில் சுகாதார வளாகம், சாலை வசதி மேம்பாடு, கழிவுநீர் வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை தலைவர் விவேகன்ராஜ் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story