ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா !

X
ஆண்டு விழா
ராசிபுரம் அடுத்த வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார் . மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக சுந்தர்ராஜன், திருமலைவாசன், பிரவீன் குமார், சபரீஷ்வரன், முருகதாஸ், கனகராஜ், சுரேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர் சந்திரா, விமலா ,ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆண்டு விழாவின் போது சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
