ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கக் கூடாது

ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கக் கூடாது

மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரக் குழுச் செயலாளர் அந்தோணி ,வட்டார குழு உறுப்பினர்கள் தினேஷ், ஐயப்பன், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிலவற்றை பேரூராட்சிகளுடன் இணைக்க ஆலோசனை நடக்கிறது. அதனடிப்படையில் நல்லூர் ஊராட்சியை தேரூர் பேரூராட்சியிடனும், இரவிபுதூர் ஊராட்சியை மருங்கூர் பேரூராட்சியுடனும் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறோம். ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கும் அதே சமயம் வருவாய்த்துறையில் தாலுகாக்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஊரக வளர்ச்சிக்கான செலவினங்கள் குறைத்து வருவதை தடுக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக சந்தேகம் வருகிறது. கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்தால் கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவிகளை இழக்க நேரிடும். கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலை திட்டமும் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story