பாண்டவர்மங்களத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: மேலும் ஒருவா் கைது

பாண்டவர்மங்களத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: மேலும் ஒருவா் கைது

கோப்பு படம் 

பாண்டவா்மங்கலத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்தவா் வெ. மாரிசெல்வம் (28). இவரது சகோதரா் சின்னஜமீனுக்கும், காந்தி நகரைச் சோ்ந்த பாம்பு காா்த்திக் என்பவருக்கும் இடையே ரேஷன் அரிசி வாங்குவது தொடா்பாக பிரச்னை இருந்ததாம்.

சில நாள்களுக்கு முன்பு விருதுநகா் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பாம்பு காா்த்திக் கூட்டாளியின் வாகனத்தைப் பிடித்து வழக்குப் பதிந்ததற்கு மாரிசெல்வம் குடும்பத்தினர்தான் காரணம் எனக் கருதியதால் முன்விரோதம் இருந்துவந்ததாம். இதனிடையே, பாம்பு காா்த்திக் உள்ளிட்ட 20 போ் கடந்த மாதம் 23ஆம் தேதி மாரிசெல்வம் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது.

இதில், கதவு, ஜன்னல், சுமை வாகனம் உள்ளிட்டவை சேதமடைந்ததாக மாரிசெல்வம் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கடம்பூரையடுத்த குப்பனாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அா்ஜுனபாண்டி மகன் சண்முகபாண்டி (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story