அரிமளத்தில் பங்குனி தேரோட்டம்!
பங்குனி திருவிழா
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா. அரிமளத்தில் பங்குனி தேரோட்டம்.
புதுகோட்டை திருமயம் அரிமளம் மார்க்கெட் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதல் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அரிமளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
Next Story