எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பங்குனி திருவிழா 19-ந்தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 26-ந் தேதி இரவு 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைத்தலும், 27-ந் தேதி காலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம், அலகுகுத்துதல் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு 7 மணிக்கு அக்னி கரகம், பூங்கரகத்துடன், மின் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறுகிறது.

28-ந் தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் வீதிஉலாவும், மாலை 6 மணிக்கு தீமிதி நிகழ்ச்சியும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்ககவசம் சாத்துதலும், 30-ந் தேதி மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணிக்கு நவீன முறையில் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் சத்தாபரணம் வீதிஉலா நடக்கிறது. 31-ந் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. முகூர்த்தக்கால் நடும் விழா விழாவை முன்னிட்டு நேற்று காலை எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. திருவிழா ஆலோசனை குழு தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டன. எல்லைப்பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story