பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி!

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி!

மஞ்சுவிரட்டு போட்டி

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி- ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் சிவகங்கை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தேவகோட்டை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாடுகள் முட்டியதில் 35 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் சிவகங்கை மருத்துவ கல்லூரியிலும், 3 பேர் தேவகோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story