ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா 12ல் துவக்கம்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா 12ல் துவக்கம்

பைல் படம்


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா வரும் 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக் கான பங்குனி திருவிழா வருகிற 12-ந்தேதிதொடங்குகிறது.அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் வாத்தியங்கள் முழங்க கருட இலச்சினை பொறிக்கப்பட்டகொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு தீபாரா தனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத் தில் பவனி வந்து அருள்பாலிக்கிறார்.விழா நாட்களில் தினமும் சுவாமி விதவிதமான வாகனத் தில் பவனி வரும் நிகழ்ச்சியும்,சமய சொற்பொழிவு போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது. 16-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதி யில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு கிராதம் கதகளியும், 21-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில்சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி தொடங்குகிறது.

பின்னர் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. பிறகு அங்கிருந்து கோவி லுக்கு சுவாமி திரும்புதலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல் விருத்தம் கதகளியும் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags

Next Story