மகா காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா !
பங்குனி திருவிழா
நாகை மாவட்டம் திட்டச்சேரி மகா காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி மகாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு பங்குனி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள்,சந்தனம், குங்குமம், மாப்பொடி,திரவியம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து இன்று இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும்,நாளை காலை அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சியும், பெரியாச்சி, வீரனுக்கு படையல்,விடையாற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story