பங்குனி பூக்குழி திருவிழா
தென்காசியில் முத்தாரம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கல் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசியில் அருள்மிகு மேல முத்தாரம்மன் திருக்கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மேல முத்தாரம்மன்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கினர். இதில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story