காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திரம்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திரம்

காவடி பழனியாண்டவர்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திரம் தேர்த்திருவிழா நாளை நடக்கிறது.
சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 63-ம் ஆண்டாக பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன் நடை திறக்கப்பட்டு தங்க கவசம் சாத்துப்படி நடக்கிறது. 9 மணிக்கு காவடிகள் புறப்பாடு, அருள்வாக்கு கூறும் நிகழ்வும், மதியம் 12 மணிக்கு காவடிகள் கோவிலை வந்தடையும். அதன்பிறகும் அருள்வாக்கும், அபூர்வ பஞ்சாமிர்த நிவேதனமும் சாமிக்கு படைக்கப்படுகிறது. தொடர்ந்து சேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருப்புகழ் சபையின் சார்பில் பஜனையும், மதியம் 1 மணிக்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் சங்கீத நாட்டியப்பள்ளிசார்பில் செந்தில்குமார் குழுவினரின் நாட்டிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு 1,008 பால்குட ஊர்வலமும், மாலை 5.30 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கிறார்கள். மாலை 6 மணிக்கு சினிமா மெல்லிசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சத்தாபரணமும், 27-ந் தேதி விடையாற்றி உற்சவம், திருஊஞ்சல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story