கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா

கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா

பால தண்டாயுதபாணி

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடந்த பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில் தனி சன்னதி கொண்டுள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முருகனுக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், விபூதி, தேன், மஞ்சள் உள்ளிட்ட 21 வகை அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Tags

Next Story