மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

மயிலம்  முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

 மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா விமரிசையாக நடந்தது

மயிலம், முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த 15ம் தேதி அன்று காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து 19ம் தேதி இரவு தங்க மயில் வாகன உற்சவமும், 22 திருக்கல்யாண உற்சவமும் அதனை தொடர்ந்து இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் மலை வலம் வரும் காட்சியும், இன்று அதிகாலை 6.45 மணிக்கு மயிலம் இருபதாம் பட்டம் பொம்மபுர ஆதீனம் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். முதலில் விநாயகர் தேரை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பெரிய தேரிலும் சென்றது.

அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் ஒலிக்க தேரானது அசைந்து அடி சென்றது, இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story