சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர விழா

சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர விழா

 காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர விழா

சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

சேலம் ஜங்ஷன், ஜாகிர் அம்மாபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் மற்றும் தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரம் மற்றும் தேர்த்திருவிழா வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரமத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக காவடி பழனியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன்படி 25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று காலை கோமாதா பூஜை, சிறப்பு அலங்காரம், விசேஷ ஹோமங்கள், காவடிகள் புறப்பாடு, அருள் வாக்கு ஆகியவை நடக்கிறது. காலை 10 மணிக்கு திருப்புகழ் பஜனை நடக்கிறது. மதியம் 1 மணி முதல் 2 மணி வரை 'ஏன் முருகனை வணங்க வேண்டும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நாட்டிய நடனம் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு 1008 பால் குட ஊர்வலம் எடுத்து வந்து காவடி பழனியாண்டவருக்கு அபிஷேகம், பின்னர் தேரோட்டம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. 26-ந்தேதி காலை 9 மணிக்கு ஞானக்காவடி முருகன் அலங்காரம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சத்தாபரணம்,வாண வேடிக்கை நடக்கிறது 27-ந்தேதி திருஊஞ்சலும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Tags

Next Story