மதுரையில் பங்குனி உத்திர பால்குடம் விழா

மதுரையில் பங்குனி உத்திர பால்குடம் விழா

மதுரை அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு ஸ்ரீ ஞானவேல் முருகன் திருக்கோவில் வருடாபிஷேகம் பங்குனி உத்திர பால்குடம் விழா நடைபெற்றது.


மதுரை அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு ஸ்ரீ ஞானவேல் முருகன் திருக்கோவில் வருடாபிஷேகம் பங்குனி உத்திர பால்குடம் விழா நடைபெற்றது.
மதுரை அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானவேல் முருகன் திருக்கோவில் 11 ம்ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர பால்குட நீராட்டு விழா 3 நாட்கள் மிக விமர்சையாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் என பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டிய விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.மேலும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஞானவேல் முருகன் திருக்கோவில் சார்பாக தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவிலில் கிராம பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஞானவேல் முருகன் திருக்கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொண்ணு பிள்ளை தோப்பு கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story