மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர விழா

மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  பங்குனி உத்திர விழா
மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அச்சரப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமத்தில் உள்ள நடுபழனி அருள்மிகு மரகததண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் 58 -ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி ஸ்ரீ மரகதண்டாயுதபாணி திருத்தேரில் எழுந்தருளி கனகமலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார். மூலவரான ஸ்ரீ மரகத தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன.

விழாவில் பக்தர்கள் பால் காவடி, புஷ்பகாவடி எடுத்தும்,முதுகில் சடல் போட்டு வாகனங்களை இழுத்தல்,அந்தரத்தில் தொங்கி முருகனுக்கு மாலை அணிவித்தல், கன்னத்திலும், நாக்கிலும் அலகு குத்தியும், மொட்டை அடித்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story