பாஞ்சாலங்குறிச்சி கோவில் திருவிழா - பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

பாஞ்சாலங்குறிச்சி கோவில் திருவிழா - பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

எஸ்பி பாலாஜி சரவணன் ஆலோசனை 

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்றும் மற்றும் நாளையும் நடைபெற உள்ளது இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தொடர் ஜோதி ஓட்டம் கொண்டுவரப்பட்டு ஊர்வலமாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு கொண்டு செல்லப்படும். இதையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்ட 58 அரசு மதுபான கடைகள் நாளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வீர செக்க தேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் நெல்லை கன்னியாகுமரி உள்ள உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

Tags

Next Story