விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
ஒன்றிய குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவர் காமு மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா இளங்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். உதவியாளர் சங்கர் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் வார்டுக் குழு உறுப்பினர்கள் சத்தியசீலன், அன்பழகன், மணிகண்டன், முத்துலட்சுமி காளமேகம், மதியழகன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழு தலைவர் காமு மணி, உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நிதி நிலைக்கு ஏற்றவாறு வழிவகை செய்யப்படும் என்றார். ஒன்றிய மேலாளர் ராஜ பழனி நன்றி கூறினார்.
Next Story