அரசு மாணவியர் விடுதியில் பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு

அரசு மாணவியர் விடுதியில் பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு
 வேல்முருகன் எம்.எல்.ஏ ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இயங்கி வரும் அரசு மாணவியர் விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள மாணவிகளின் எண்ணிக்கை குறித்து வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததோடு, அங்கே மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், சுவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மழைக்காலத்தில் மாணவிகளின் உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story