பண்ருட்டி எம்எல்ஏவை விசிக தலைவர் சந்திப்பு !

பண்ருட்டி எம்எல்ஏவை விசிக தலைவர் சந்திப்பு !

 சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் ஆகியோர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் ஆகியோர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளை எம்எல்ஏ தெரிவித்தார்.

Tags

Next Story