பாபநாசம்: பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் முக்கிய பாசன வாய்க்கால்களில் ஒன்றாக விளங்கிய பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர தண்ணீர் திறந்து விடாததால் வாய்க்காலின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் சரிவர பாசன வசதி பெற முடியாமல் பல வருடங்களாக பாதிக்கப்பட்டு வருகிறது.

மின் மோட்டாரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் இருக்கு இடமே தெரியாமல் போய்விடும் எனவே அரசு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு பாபநாசம் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலின் முழு தூரத்தையும் தூர்வாரி தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story