பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால், நேற்று ஓரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால், நேற்று ஓரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 57 அடியாக இருந்த நிலையில் இன்று (மே 25) ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 64 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story